சேமியா பாயசம் (4)
0
தேவையான பொருட்கள்:
சேமியா - 200 கிராம்
சர்க்கரை - 300 மில்லி
பால் - 400 மில்லி
முந்திரிப்பருப்பு - 100 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
கேசரிபவுடர் - சிறிது
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி சேமியாவை வறுத்து எடுத்து விட்டு அதே வாணலியில் முந்திரி பருப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து சேமியாவைப் போட்டு வேக விட்டு அதில் கேசரிபவுடர் சேர்க்கவும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை போட்டு கரையும் வரை கிளறவும்.
பாலை கொதிக்க வைத்து அதில் ஏலக்காயை பொடி, போட்டு அதை சேமியாவுடன் ஊற்றி இறக்கவும்.
இறக்கியவுடன் வறுத்து வைத்த முந்திரி பருப்பை அதில் பெளலில் போட்டு பரிமாறவும்.