சேமியா அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்

சீனி - 1 1/2 கப்

நெய் - 1/2 கப்

பாதாம் பருப்பு - 20 கிராம்

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

சேமியாவை தூள் செய்து ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பாதாம் பருப்பினை சிறிது நேரம் ஊறவைத்து தோல் நீக்கி அதனையும் நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.

பாகு கம்பிப் பதத்திற்கு வரும் சமயம், வறுத்து வைத்துள்ள சேமியாவினை அதில் கொட்டி, பாலையும் ஊற்றி நன்கு கிளறவும்.

சேமியா வெந்ததும், சிறிது சிறிதாக நெய்யினை ஊற்றி விடாமல் கிளறவும்.

கலவை நன்கு வெந்து திரண்டு வரும்போது ஏலப்பொடி, கேசரிப்பவுடர், பாதாம் பருப்பு ஆகியவற்றை போட்டுக் கிளறி அல்வா பதத்திற்கு வந்தபிறகு இறக்கவும்.

நெய் தடவிய ஒரு தாம்பலத்தில் கொட்டி, பரப்பி ஆறியபிறகு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

குறிப்புகள்: