சேமியான் கேசரி
தேவையான பொருட்கள்:
சேமியான் - 500 கிராம்
சீனி - 350 கிராம்
முந்திரி - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 15
ஏலக்காய் - 4
நெய் - 50 கிராம்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் சேமியானை ஒரு கப்பில் அளந்துக் கொள்ளவும், ஒரு கப்பிற்கு ஒன்னரை வீதம் தண்ணீரையும் அளந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு நாண் ஸ்டிக் கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அதில் சேமியானை லேசாக வறுக்கவும்.
இளஞ்சிவப்பாக மாறும் போது அதில் அளந்து வைத்துள்ள தண்ணீரையும் உப்பையும் சேர்க்கவும்.
கலர் பவுடரையும் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். பின்பு இளந்தீயில், மூடி சிறிது நேரம் புழுங்கவிடவும்.
சேமியான் வெந்தபிறகு அதில் சீனியை கொட்டி கிளறவும். பின்பு வேறொரு வாணலியில் நெய்யை விட்டு காய்ந்ததும் அதில் ஏலக்காயை போடவும்.
பிறகு முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு சிவந்ததும் சேமியானில் கொட்டி கிளறவும், விருப்பமானவர்கள் பனீர் சிறிது சேர்க்கலாம்.
பின்பு நெய் தடவிய தாம்பாளத்தில் இரண்டு இன்ச் உயரத்திற்கு கொட்டி பரப்பவும், ஆறிய பின்பு விரும்பிய வடிவில் துண்டங்கள் செய்யவும்.