செளசெள அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

செளசெள - 2

சீனி - 300 கிராம்

நெய் - 1/4 கப்

ஏலக்காய் - 4

பால் - 1 1/4 கப்

கறுப்பு திராட்சை - 8

முந்திரி - 10

செய்முறை:

செளசெளயை தோல் சீவி விட்டு காரட் துருவியில் வைத்து நைசாக துருவிக் கொள்ளவும். ஏலக்காய், சீனி ஒரு தேக்கரண்டி இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயுடன் சீனி போட்டு பொடி செய்தால் எளிதில் பொடியாகி விடும்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் துருவிய செளசெளவை போட்டு 10 நிமிடம் நன்கு வேக விடவும். இடையில் நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

காய் வெந்து நன்கு குழைந்ததும் அதனுடன் சீனி மற்றும் பொடி செய்த ஏலக்காயை சேர்க்கவும். சீனி காயுடன் சேர்ந்து நன்கு கரையும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் திராட்சையை போட்டு 15 நொடி வதக்கி விட்டு எடுத்து விடவும்.

வறுத்த முந்திரியை ஹல்வாவுடன் கொட்டி கிளறி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து அடிப்பிடிக்காமல் 12 நிமிடம் கிளறி விடவும். இடையிடையே ஹல்வா ஒட்டாமல் இருக்க மேலே நெய் ஊற்றி கிளறி விடவும்.

பின்னர் ஹல்வா திரண்டு வந்ததும் மேலே மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு ஒரு முறை கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: