செனக பப்பு பூரில்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் - 2

தேங்காய் துருவியது - 1 கப்

தோசை மாவு - 1 கப்

எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை கழுவி சுத்தம் செய்து பின் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 (அ)4 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.

வெந்த கடலை பருப்பில் உள்ள நீரை நன்றாக வடித்து கொள்ளவும்.

கடலை பருப்பை மிக்சியில் துருவியது போல அரைத்து எடுத்து கொள்ளவும்.

அரைத்த கடலைபருப்புடன் வெல்ல தூளை கலந்து அடுப்பில்வைத்து சுருள கிளரவும்.

பூரணம் நன்கு சுருள வரும் போது அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

இந்த பூரணம் ஆறியவுடன் உருண்டை பிடித்து வைத்து கொண்டு தோசை மாவில் முக்கி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: