சுரைக்காய் அல்வா
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 2 பெரிய காய்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் சுரைக்காயை தோல் சீவி நடுவில் இருக்கும் விதை பகுதியை நீக்கி விடவும்.
பின்னர் சுரைக்காயினை காரட் துருவுவது போல துருவி கொள்ளவும்.
சுரைக்காயில் நிறைய தண்ணீர் இருக்கும். அதனால் தண்ணீரை பிழிந்து எடுத்து விடவும். (அல்லது ஒரு துணியில் கட்டி பிழியவும்.)
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி இந்த துருவிய சுரைக்காயை போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
இப்படியே சுமார் 20 -30 நிமிடம் காய் வேகும் வரை 4 -5 நிமிடத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக நெய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் கோவாவை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
பின்னர் சர்க்கரை மற்றும் ரெட் கலர் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.