சீப்பு பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கிலோ
வெண்ணெய் - 150 கிராம்
சீனி - 4 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப் (பிசைய)
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வெண்ணெயை உருக்கி சூடாக மைதாவில் ஊற்றி உப்பு, சீனி, பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு இறுக்கமாக பிசையவும்.
பின் மாவை சப்பாத்தி கட்டையில் அல்லது சமதளத்தில் வைத்து தேய்க்கவும்.
படத்தில் உள்ளது போல் நறுக்கி ஓரத்தில் கீறி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இஞ்சி கொத்து பணியாரம், வில்லை பணியாரம், சீப்பு பணியாரம் என்றும் சொல்வதுண்டு