சிவப்பரிசி பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
சிவப்பரிசி - 2 ஆழாக்கு (400 கிராம்)
உளுந்து - 1/2 ஆழாக்கு (100 கிராம்)
பால் - 100 மில்லி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து மைய அரைக்கவும். உப்பு சேர்த்து, சர்க்கரை, பாலையும் சேர்த்து கரைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தட்டையான கரண்டியால் மாவை ஊற்ற வேண்டும். திருப்பிபோட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.