சாக்லேட் வாழைப்பழ கேக்
தேவையான பொருட்கள்:
பொடித்த சீனி - 125 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்
தேன் - 25 கிராம்
முட்டை- 2
நன்கு பிசையப்பட்ட வாழைப்பழம் - 1
மைதா - 150 கிராம்
கோக்கோ பவுடர் - 3 மேசைக்கரண்டி
பட்டர் க்ரீம் - தேவையான அளவு
சாக்லேட் விழுது - தேவையான அளவு
செய்முறை:
மாவை 3 தடவைகள் சலிக்கவும்.
வெண்ணெயையும் சீனியையும் நன்கு அடிக்கவும்.
முட்டைகளை நன்கு அடித்து வெண்ணெய்க் கலவையில் சிறிது சிறிதாக முட்டையைக் கலந்தவாறே அடிக்கவும்.
தேனையும் வாழைப்பழைப்பழத்தையும் சேர்த்துநன்கு அடிக்கவும். இறுதியாக மாவைச் சேர்க்கவும்.
இரண்டு கேக் டின்களில் கேக் கலவையை சரி சமமாக ஊற்றவும்.
ஏற்கனவே 160 டிகிரி C அளவில் சூடுபடுத்தப்பட்ட காஸ் அவனில் வைத்து 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.
பட்டர் க்ரீம் செய்யும் விதம்:
வெண்ணெய்- 125 கிராம்
முட்டை- 3
பொடித்த சீனி - 125 கிராம்
முதலில் வெண்னெயை நன்கு அடித்து தனியே எடுத்து வைக்கவும்.
முட்டையையும் சீனியையும் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு அடிக்கவும். மெதுவாய் வெண்ணையில் பீட்டரால் அடித்தவாறே கலக்கவும். இந்த க்ரீமை ஒரு கேக் மேல் முழுவதுமாக தடவி மற்றொரு கேக்கால் மூடவும்.
சாக்லேட் விழுது தயாரிக்கும் விதம்:
துருவிய சாக்லேட்- 250 கிராம்
சிங்கிள் க்ரீம் - 120 மி.லி
ஒரு கனமான saucepanல் க்ரீமை ஊற்றி சூடு செய்யவும். நகு சூடானதும் கொதிப்படஹ்ற்கு முன் வெளியே எடுத்து துருவிய சாக்லேட்டை சேர்த்து ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கவும்.
இந்த விழுதை சாக்லேட் கேக்கின் மீது சமமாகப் பரப்பவும்.