சாக்லேட் குக்கீஸ்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

பேக்கிங் சோடா - 2 தேக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி

வெண்ணெய் - 225 கிராம்

பிரவுன் சுகர் (நாட்டு சர்க்கரை) - 150 கிராம்

முட்டை - 2

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

பாதாம் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 150 கிராம்

சாக்லேட் சிப்ஸ் - 200 கிராம்

உப்பிட்டு வறுத்து பொடித்த பாதாம் - 1 கப்

செய்முறை:

ஓவனை 150 டிகிரி C முற்சூடு செய்யவும். முட்டை மற்றும் வெண்ணெய் குளிர்ந்திருக்க கூடாது. அறையின் வெப்ப நிலையில் இருப்பது அவசியம்.

முதலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து ப்ளெண்டரால் நன்கு கலக்கவும். ப்ளெண்டர் இல்லையென்றால் மிக்ஸியில் போட்டு சுத்தவும்.

கலவை இந்த பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும்.

பின்பு நன்கு கலக்கி வைத்துள்ள முட்டை மற்றும் எசன்ஸை சேர்த்து நன்கு கலக்கவும். மிதமான சுழற்சியில் இப்பொழுது கலக்க வேண்டும்.

கலவை இந்த பதத்திற்கு வரும் வரை கலக்கவும். இப்பொழுது மாவை சலித்து விட்டு அதனுடன் உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கலவையுடன் சேர்த்து கிளறவும். இப்பொழுது ப்ளெண்டரை உபயோகிக்காமல் ஸ்பாச்சுளா அல்லது கரண்டி கொண்டு கிளறவும். கிளறும் போது ஓரத்திலிருந்து நடுவாக கிளறவும்.

இது தான் பதம். ரொம்பவும் கிளறி விடக் கூடாது. மாவு வெண்ணெயுடன் கலக்கும் வரை கிளறினால் போதும்.

இப்பொழுது தேங்காய் துருவல், பொடித்த பாதாம், சாக்லேட் சிப்ஸ் சேர்த்து முன்னர் சொன்னது போல கிளறவும். அழுந்த கிளறினால் குக்கீ வன்மையாக ஆகி விடும்.

கலந்த மாவு இந்த பதத்தில் இருத்தல் வேண்டும்.

ஒரு ஐஸ்க்ரீம் ஸ்கூப் அல்லது சின்ன கரண்டி வைத்து கலவையை அள்ளி இரண்டு இன்ச் இடைவெளி விட்டு குக்கீ சீட்டில் வைக்கவும். ஓவனில் வைத்து 18-20 நிமிடம் பேக் செய்யவும்.

குறிப்புகள்: