சாக்லேட் ஃபட்ஜ்(மைக்ரோவேவ்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோக்கோ பௌடர் - 1 தேக்கரண்டி

பால் பவுடர் - 1 கப்

சர்க்கரை - 3/4 கப்

நெய் - 2 தேக்கரண்டி

தண்னீர் - 1/4 கப்

செய்முறை:

சர்க்கரையும் தண்னிரையும் கலந்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் 1 நிமிடங்கள் வைக்கவும்.

பால் பவுடர், கோக்கோ பவுடர்,நெய் இவை எல்லாவற்றையும் சர்க்கரை பாகில் கொட்டி நன்றாக கலக்கி மீண்டும் 2 நிமிடங்கள் வைக்கவும்.

வெளியே எடுத்து மீண்டும் 1 நிமிடம் கலக்கி வைக்கவும்.

ஒரு நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டி விரும்பிய வடிவங்களில் கட்டிகளாக வெட்டவும்.

குறிப்புகள்: