சர்க்கரை போளி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 1 கப்

கடலைப் பருப்பு - 1 கப்

மண்டை வெல்லம் - 1/4 கிலோ

தேங்காய் - 1

ஏலக்காய் - 4

நெய் - சிறிது

நல்லெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

மைதாவை தண்ணீர் ஊற்றி சற்று தளர்ச்சியாக பிசையவேண்டும்.

பிசைந்தபின் மேலாக சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி 3 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு வைக்கவும்.

கடலைப்பருப்பை முக்கால் வேக்காடாக வேகவைத்து இறக்கி, நீரை நன்கு வடித்துவிட்டு இத்துடன் நுணுக்கிய மண்டைவெல்லம் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் அம்மியில் வைத்து அரைக்கவும்.

தேங்காயை துருவி எடுத்த பூவை நன்கு நெய்யில் வதக்கி, அரைத்து வைத்துள்ள பருப்பு, வெல்லக் கலவையுடன் சேர்த்து, சிறிது நுணுக்கிய ஏலக்காயையும் கூடச் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிறகு, பிசைந்து வைத்த மைதாமாவை எண்ணெய் தடவிய பூரிப் பலகையின் மேல் சிறிது சிறிதாக உருட்டி எடுத்து வைத்துக் கையால் தப்பி, விரித்து விடவும்.

இதன் நடுவில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பூ கலவையை சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்து மூடி, மீண்டும் இதை கையால் தப்பி, சப்பாத்தி அளவிற்கு விரித்து விடவும்.

இதனை தோசை கல்லில் இட்டு, நெய் ஊற்றி இருபுறமும் சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: