சர்க்கரை பொங்கல் (2)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 டம்ளர்
பாசி பருப்பு - 1 மேசைக்கரண்டி (லேசாக வறுத்து கொள்ளவும்)
துருவிய வெல்லம் - 1/2 டம்ளர்
முந்திரி - 5
கிஸ்மிஸ் பழம் - 5
ஜாதிக்காய் பவுடர் - ஒரு பின்ச்
ஏலக்காய் - 2
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
அரிசியை களைந்து அத்துடன் பாசிப்பருப்பையும் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் ஒன்னறை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பின்ச் உப்பு சேர்த்து ஊறிய அரிசிபருப்பை சேர்க்கவும். பாதி வெந்ததும் வெல்லத்தையும் ஏலக்காயையும் சேர்க்கவும்.
வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதித்து கொண்டிருக்கும் பாதி வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.
குக்கரை மூடி போட்டு தீயை மீடியமாக வைத்து மூன்றாவது விசில் வந்ததும் ஆஃப் பண்ணவும்.
நெய்யில் ஜாதிக்காய், முந்திரி, கிஸ்மிஸ் பழம் கருக விடாமல் வறுத்து போடவும். சர்க்கரை பொங்கல் குக்கரில் பதமாக பார்த்து செய்தால் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும்.
குறிப்புகள்:
வெல்லத்தை குறைத்து கொண்டு சிறிது சர்க்கரை, தேன் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.