சர்க்கரை சேவு
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 3 1/4 கப்
அரிசிமாவு - 4 கப்
டால்டா - 100 கிராம்
சர்க்கரை - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
கடலைமாவு, அரிசிமாவு இவற்றுடன் டால்டா அல்லது வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவினை சேவுக்கரண்டி கொண்டு அழுத்திப் பிழிந்து விடவும்.
சேவு ஒன்று அல்லது இரண்டு அங்குல நீளத்துண்டுகளாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அதற்கு தகுந்தார்போல் கையினால் நறுக்கி விட்டுக் கொள்ளவும்.
சேவு பொன்னிறமாக வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பாகாக காய்த்து கொள்ளவும்.
சுட்டு வைத்துள்ள சேவினை சர்க்கரை பாகில் போட்டு கிளறி இறக்கி வைக்கவும்.
பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் கிளறி ஆறவிடவும். ஆறினவுடன் சர்க்கரை பாகு வெள்ளைநிறத்தில் இருக்கும்.