சர்க்கரைவள்ளி பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 (Medium Size)

பால் - 3 கப்

சர்க்கரை - 1/2 கப் (தேவைக்கு)

நெய் - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - சிறிது

முந்திரி, திராட்சை - சிறிது

ரோஸ் சிரப் (விரும்பினால்) - 1 மேசைக்கரண்டி

ரோஜா இதழ்கள் (விரும்பினால்) - சிறிது

செய்முறை:

பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சை வறுத்து எடுக்கவும்.

அதே பாத்திரத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி துருவி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

சிறிது நேரம் வதக்கியதும் பால் சேர்த்து வேக விடவும்.

கிழங்கு வெந்து வரும் நேரத்தில் சர்க்கரை, ஏலக்காய் தூள், சிறிது ரோஜா இதழ்கள் சேர்க்கவும்.

சர்க்கரை கரைந்து பாயாசம் பதமாக வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம், கப்பில் ஊற்றிய பின் மேலே ரோஸ் சிரப் ஊற்றி அலங்கரிக்கவும்.

ரோஜா இதழ்கள் இல்லை என்றால் விட்டு விடலாம். ரோஸ் சிரப் சூடாக இருக்கும் போது சேர்க்க வேண்டாம். ரோஸ் சிரப் சேர்க்காமலும் செய்யலாம்.