க்ரிஸ்பி பக்லவா பிங்கர்ஸ்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பைலோ ஷீட் - 8

ஒலிவ் எண்ணெய் - 1/2 கப்

பிஸ்தா பருப்பு - 1/4 கப்

பாதாம் பருப்பு - 1/4 கப்

வால் நட் - 1/4 கப்

பெக்கான் பருப்பு - 1/4 கப்

சீனி - 1/4 கப்

கறுவா(பட்டை)த்தூள் - 2 சிட்டிகை

பேக்கிங் தட்டு - 1

செய்முறை:

அவனை 350 Fஇல் முற்சூடு செய்து வைக்கவும். பக்லவா செய்ய தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பருப்புக்களை லேசாக வறுத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு கோர்சாக(coarse) அரைக்கவும்.

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சீனி, கறுவாத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு பாச்மன்ட்/வக்ஸ் பேப்பரை விரித்து அதன் மேல் இரண்டு பைலோ ஷீட்களை விரித்து மேலே உள்ள ஷீட்டிற்கு ஒரு பிரஷால் ஒலிவ் எண்ணெயை பரவலாக பூசவும்.

அதன் மேல் பருப்புக் கலவையை தூவி பரப்பி விடவும்.

பின்னர் ஒரு அந்தத்திலிருந்து பருப்பு தூவிய பைலோ ஷீட்டை மட்டும் இறுக்கமாக ரோல் போல சுருட்டி எதிர் முனையில் அப்படியே மற்றைய பைலோ ஷீட்டின் மேல் வைக்கவும்.

பின்னர் கீழே உள்ள பைலோ ஷீட்டிற்கு எண்ணெய் தடவி மறுபடியும் மேலிருந்து கீழாக இறுக்கமாக சுருட்டவும்.

இவ்வாறு பருப்பு முடியும் வரை ரோல்கள் செய்து ஒரு எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் அடுக்கி மேலே மிகுதி எண்ணெயை தடவவும்.

பின்னர் ஒரு கூரான கத்தியால் ஃபிங்கர்ஸ்களாக வெட்டவும்.

அதன் பிறகு முற்சூடுப்படுத்திய அவனில் நடுத்தட்டில் வைத்து 35 நிமிடங்களுக்கு அல்லது மேற்பகுதி பொன்னிறமாகும்வரை பேக் செய்யவும்.

குறிப்புகள்:

க்ரிஸ்பியாக இருக்கும். இதனை ஆற விட்டு அப்படியே சாப்பிடலாம்.

இதன் மேல் தேன், சாக்லெட் சிரப் ஊற்றியும் சாப்பிடலாம்.

சாதாரண பக்லவாவிற்கு செய்வது போல சீனி சிரப் தயாரித்து ஊற்றி ஊற விட்டும் சாப்பிடலாம்.