கோதுமை ஹல்வா
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை - 250 கிராம்
சீனி - 350 கிராம்
நெய் - 250 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்
எழுமிச்சை பழம் - பாதி
ஏலப் பொடி - 1 மேசைக்கரண்டி
கலர் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதல் நாள் இரவில் கோதுமையை ஊறவைத்து மறு நாள் காலையில் நன்கு ஆட்டி பால் எடுக்கவும்.
மூன்றுமுறை ஆட்டவும் பாலும் ,தண்ணீரும் சேர்த்து 1 லிட்டர் வரும் படி எடுக்கவும்.
முந்திரிபருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும்.
பின் மாலையில் அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் கோதுமை கலவையை ஊற்றி சீனியை சேர்த்து நன்கு கிளறி
கலர் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.
அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாத்திரத்தில் ஒட்டும் போது சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கிளறவும்.
ஹல்வா பதம் வரும் போது நெய் கக்க ஆரம்பிக்கும் அப்பொழுது எழுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றவும்.
பின் ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும் பின் முந்திரிபருப்பை சேர்த்து நன்கு கிளறவும் ஹல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்