கோதுமை ரவை கேசரி (1)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
ப்ளைன் கோவா - 1/4 கப்
பாதாம் - 10
நெய் - 1/2 கப்
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பாதாமை கொதி நீரில் 10 நிமிடங்களுக்கு போட்டுவைக்கவும்.
பிறகு அதைஎடுத்து,தோல் நீக்கி மெல்லிய நீளத்துண்டுகளாகச்சீவிக்கொள்ளவும்.
கடாயில் கொஞ்சம் நெய் ஊற்றி காய்ந்ததும் கோதுமை ரவையைச்சேர்த்து நன்கு வாசனை வரும்படி வறுக்கவும்.
அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
வெந்ததும் சர்க்கரை கோவா சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கிளறவும்.
கலவை இளகி மீண்டும் கெட்டியாகும்போது பாக்கி நெய்யையும் ஊற்றி சுருள கிளறி இறக்கி பாதாம், ஏலப்பொடி சேர்த்துகலக்கவும்.