கோதுமை மாவு அல்வா
2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
நெய் - 1/2 கப்
பால் 1 கப்
முந்திரி - 6
ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
கோதுமை மாவை சலிக்கவும்.
அடி கனமான வாணலியில் சலித்த கோதுமை மாவை நெய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
இதில் பாலை ஊற்றி அடிப்பிடிக்காமல் கிளற வேண்டும்.
மாவு வெந்தவுடன் சர்க்கரையைப் போட்டு நன்கு கிளறி, ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.