கோதுமை பாயசம்
0
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1/2 கப்
தேங்காய்பால் - 3 கப்
வெல்லம் - தேவைக்கேற்ப
நெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
ஏலக்காய் - 2
செய்முறை:
வாணலியில் கோதுமை ரவையை போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
தேங்காயை துருவி மூன்று முறை தண்ணீர் ஊற்றி பாலை எடுத்து தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்.
முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக உடைத்து வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டாவது, மூன்றாவதாக எடுத்த பாலை ஊற்றி ரவையை போட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்து கரைந்ததும் வெல்லம், ஏலப்பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு போட்டு இறக்கவும். பிறகு முதல் பாலை ஊற்றி கிளறி பரிமாறவும்.