கோதுமை பணியாரம் (1)
0
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை மாவு - 1 கப்
இடித்த பச்சரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் - 1/2 மூடி
செய்முறை:
தேங்காய் மூடியை கழுவி துருவி வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிக்கட்டி கொள்ளவும்.
அதனுடன் கோதுமை மாவு, பச்சரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்து கரைத்து வைக்கவும்.
பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி அதில் குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி, நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.