கோதுமை பணியாரம்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கோப்பை
மைதா மாவு - 1/2 கோப்பை
வெல்லத்தூள் - 1/2 கோப்பை
வாழைப்பழம் - 2
தேங்காய்ப்பூ - 1/4 கோப்பை
சீரகம் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
உப்புத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 கோப்பை
செய்முறை:
வெல்லத்தூளை ஒரு கோப்பை சுடு தண்ணீரில் போட்டு கரையும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி ஆறவைக்கவும்.
வாழைப்பழத்தை நன்கு பிசைந்து வைக்கவும்.
சீரகம், ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
பிறகு கோதுமையையும் மைதாவையும் உப்பு, ஆப்பசோடாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
கலக்கிய மாவுடன் தேங்காய்ப்பூவை போட்டு, வெல்ல கரைசலை ஊற்றி வாழைப்பழம், சீரக பொடியையும் போட்டு நன்கு கலக்கவும்.
தொடர்ந்து வேண்டிய அளவுக்கு தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு தயாரித்த மாவு கலவையை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கலவை இட்லி மாவு பதத்தை விட சற்று கெட்டியாக இருக்கவேண்டும்
பிறகு மீண்டும் ஒரு முறை மாவை நன்கு கலக்கி விட்டு சட்டியில் எண்ணெயை காயவைத்து கரண்டியின் உதவியால் சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
குழிப்பணியார சட்டியிலும் ஊற்றி சுட்டெடுக்கலாம்.