கோதுமைரவை கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

மில்க் மெய்ட் அல்லது ப்ளைன் கோவா - 1/4 கப்

பாதாம் - 10

நெய் - 1/2 கப்

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கப்பில் கொதிநீர் ஊற்றி அதில் பாதாமை போட்டு பத்து நிமிடம் ஊற விட்டு பின் தோல் நீக்கி சிறுத்துண்டுகளாக நீளவாக்கில் சீவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு கோதுமையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

வறுத்ததும் மூன்று கப் நீர் ஊற்றி கொதிக்க விடவும். சிறுத்தீயில் வைத்தால் கோதுமை நன்கு வெந்து இருக்கும்.

இப்போது ஏலப்பொடி சர்க்கரை சேர்த்து கிளறவும்.

பின்னர் மில்க்மெய்டை சேர்த்து கிளறவும்.

சிறிது சிறிதாக நெய்யை விட்டு பாதாமையும் போட்டு பத்து நிமிடம் சிறுத்தீயில் வைத்து கிளறவும்.

நன்கு நெய் முழுவதும் கோதுமையில் கலந்து இருக்கும். இப்போது அடுப்பை அணைக்கவும்.

கோதுமை கேசரி ரெடி.

குறிப்புகள்: