கொலுசா முறுக்கு (அச்சு முறுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

முட்டை- 2

சீனி - 1/2 கப்

உப்பு - 1 சிட்டிகை

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை நீரில் அரிசி மூழ்குமளவிற்கு ஊறவைத்து 2 மணி நேரம் கழித்து நீரை வடிக்கவும்.

பிறகு அரிசியை நிழலில் அரை மணி நேரம் உலர வைக்கவும்.

உலர்ந்த அரிசியை இடித்து இரண்டு முறை சலிக்கவும்.

தேங்காயில் இளஞ்சூடான நீர் ஊற்றி கெட்டியான தேங்காய் பால் எடுக்கவும். அதன் சக்கையில் இரண்டாம் பாலும் எடுக்கவும்.

முட்டைகளை நன்கு அடிக்கவும்.

சீனியைப் பொடி செய்து முட்டையில் உப்புடன் சேர்த்து மறுபடியும் சில வினாடிகள் அடிக்கவும்.

இதை கெட்டித்தேங்காய்ப்பாலுடன் கலந்து கொண்டு, சிறிது சிறிதாக மாவில் கலக்கவும்.

தேங்காய்ப்பால் பற்றாவிடில் இரண்டாம் பாலை சிறிது சேர்த்துக் கொள்ளவும்.

மாவு தோசை மாவுப் பதம் இருக்க வேண்டும்.

அடுப்பில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

முறுக்கு அச்சையும் அதில் மூழ்குமாறு வைத்து சூடாக்கவும்.

சூடான அச்சை மாவில் முக்கால்வாசி பாகம் மூழ்கும்படியாக அமிழ்த்தி உடனே எடுத்து எண்னெயில் வைத்து அச்சை குலுக்கிக் கொண்டே இருந்தால் முறுக்கு அச்சிலிருந்து பிரிந்து எண்ணெயின் நடுப்பகுதிக்குச் சென்று பொரிய ஆரம்பிக்கும்.

முறுக்கு பொன்னிறமாகச் சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். இதேபோல எல்லா முறுக்குகளையும் பொரித்தெடுக்கவும்

குறிப்புகள்: