கேரள நெய்பாயசம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 3 கப்
கொப்பரை-பல்லாகக் கீறியது - 1/4 கப் (விருப்பமிருந்தால் சேர்க்கவும்)
நெய் - 1/2 கப் + 1 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு நறுக்கினது - 1/4 கப்
திராட்சை - 1/4 கப்
டைமண்டு கல்கண்டு - 1/2 கப்
தேங்காய் பூ (துருவினது) - 1/2 கப்
செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக நிறம் மாறி வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின் அதனுடன் அரிசியும் கலந்து, களைந்து வடிய வைக்கவும்.
இத்துடன் 3 கப் தண்ணீர் கலந்து பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஒசை அடங்கித் திறப்பதுற்குள்ளே அடுப்பில் 3 கப் வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைய விடவும்.
பாகு நன்றாகக் கொதிக்கட்டும். பிறகு குக்கரைத் திறந்ததும் பாகை அதில் வடிகட்டி விட்டு நன்றாகக் கலக்கவும். மறுபடியும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
மொத்தம் அரை கப் நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறவும். அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
எல்லாம் சேர்ந்து வந்து, இறக்குவதற்கு முன்பு ஒரு மேசைக்கரண்டி நெய்யில் கொப்பரை-பல்பல்லாகக் கீறியது, முந்திரிப்பருப்பு நறுக்கினது, திராட்சை முதலியவற்றை வறுத்துப் போடவும்.
இறக்கியதும், டயமண்டு கல்கண்டு, தேங்காய் பூவாகத் துருவினது இரண்டையும் போட்டுக் கிளறி மூடி வைக்கவும்.
குறிப்புகள்:
இந்தப் பாயசத்தில் அரிசியை அதிகம் வேகவைக்க மாட்டார்கள்.