கேரமெல் பாயசம்
தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
சீனி - 3/4 கப்
முந்திரி - 10
நெய் - 1/4 கப்
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி சீனியை போட்டு தீயை மிதமாக வைத்து ஒரு கரண்டியால் 3 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். சீனி நிறம் மாறும் வரை கிளறவும்.
சீனி கரைந்து ப்ரவுன் கலர் ஆனதும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.
முன்பே ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கருக்கிய சீனியில் 4 கப் பாலை ஊற்றவும்.
பால் லேசாக கொதித்ததும் அதில் களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு 4 விசில் விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் முந்திரியை போட்டு 2 நிமிடம் வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
4 விசில் வந்ததும் குக்கரை திறந்து சீனியை சேர்த்து நன்கு கலக்கவும். சீனி கரைந்ததும் பிறகு வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு சூடாக பரிமாறவும்.