கேரட் ஹல்வா
தேவையான பொருட்கள்:
கேரட் - 1 கிலோ
பட்டர் - 100 கிராம்
சர்க்கரை - 1/2 கிலோ
மில்க் மெய்ட் - 1/2 டின்
முந்திரி, பாதாம், பிஸ்தா - 200 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
ஏலம் - 4
கட்டிப்பால் - 2 டம்ளர்
நெய் - 50 கிராம்
செய்முறை:
கேரட்டை கேரட் துருவியில் சிறிய துருவலில் செதுக்கி கொள்ளவும்.
துருவிய கேரட்டை ஒரு சட்டியை காய வைத்து பட்டரை உருக்கி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
2 மேசைக்கரண்டி நெய், ஏலம், இரண்டு டம்ளர் கெட்டியான பாலை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
பால் சுருண்டியதும் இரண்டு முந்திரி, பாதாம், பிஸ்தாவில் பாதியை எடுத்து அரைத்து ஊற்றவும்.
நல்லா கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் தண்ணி மாதிரி ஆகும். நல்ல வற்ற விடவும் நீர் வற்றியதும் மில்க் மெய்ட் டின் ஊற்றி கிளறி இறக்கவும்.
கடைசியில் மீதி நெய்யில் மீதி உள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் பழத்தை வதக்கி போடவும்.