கேரட் அல்வா (4)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கேரட் - 2
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் (பொடியாக செய்து கொள்ளவும்) - 4
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
கேரட்டை கழுவி ஈரம் போக துடைத்து விட்டு துருவிக் கொள்ளவும்.
துருவிய கேரட்டை நெய் விட்டு நன்கு வதக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சவும்.
பின் காய்ச்சிய பாலுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நெய்யில் வதங்கிய கேரட்டை பாலுடன் சேர்த்து நன்கு கிளறி பொடித்து வைத்துள்ள ஏலக்காயை சேர்த்து மூடி இளம் சூட்டில் சிறிது நேரம் வைக்கவும்.