கேரட் அல்வா (3)
தேவையான பொருட்கள்:
கேரட் - 2
சீனி - 3/4 கப்
நெய் - 1/4 கப்
பால் - 1 கப்
முந்திரி - 7
ஏலக்காய் - 3
செய்முறை:
கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டாக உடைத்த முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி வதக்கலாம்.
அதில் சுண்ட காய்ச்சி வைத்திருக்கும் பாலை ஊற்றி 8 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். காரட் வெந்து பால் வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அதன் பின்னர் பால் வற்றி நன்கு சுண்டியதும் அதில் சீனியை சேர்த்து நன்கு 3 நிமிடங்கள் கிளறவும். சீனி கரைந்து கெட்டியாகும் வரை கிளறவும்.
காரட் வெந்து அல்வா பதம் போல் திரண்டு வரும்போது வறுத்த முந்திரியை போட்டு மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கி பரிமாறவும்.