கேசரி புலாவ்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கோப்பை

சர்க்கரை - 1 1/2 கோப்பை

நெய் - 1/2 கோப்பை

முந்திரி - 10

திராட்சை - 1 மேசைக்கரண்டி

கிராம்பு - நான்கு

பட்டை - ஒரு துண்டு

ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

குங்குமப்பூ - 1/2 தேக்கரண்டி

உப்புத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு கொதிக்கும் நீரில் அரிசியைப் போட்டு உப்பைச் சேர்த்து பொல பொல வென்று வடித்துக்கொள்ளவும்.

பிறகு வெந்த சோற்றுடன் சர்க்கரையைகொட்டி, குங்குமப்பூ கரைந்த ஒரு மேசைக்கரண்டி நீரை தெளித்து அல்லது மஞ்சள் நிற நீரை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

பிறகு ஒரு வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு பட்டை கிராம்பை போட்டு சர்க்கரை கலந்த சோற்றை கொட்டி, ஏலப்பொடியைத் தூவி நன்கு கிளறி விடவும்.

அடுப்பின் அனலைக் குறைத்து, மூடி போட்டு பத்து நிமிடம் வைத்திருந்து முந்திரி திராட்சையைத் மேலாகப் போட்டு அலங்கரிக்கவும்.

குறிப்புகள்:

இந்த கேசரி புலாவை விருந்துக்களில் பக்க உணவாக செய்து சூடாக பரிமாறி பாராட்டை பெறலாம்.