குலாப் ஜாமூன் (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்

டின் பால் (கன்டென்ஸ்டு மில்க்) - 1/2 டின்

சீனி (சர்க்கரை) - 250 கிராம்

நெய் - 2 தேக்கரண்டி

அப்பச்சோடா - 1/2 தேக்கரண்டி

வனிலா - ஒரு தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - அரை போத்தல்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா) அப்பச்சோடா உப்பு, நெய், வனிலா, டின்பால் (கன்டென்ஸ்டு மில்க்) ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைக்கவும்.

குழைத்த பின்பு இந்த பாத்திரத்தை ஒரு மணித்தியாலம் நன்றாக மூடிவைக்கவும்.

ஒரு மணித்தியாலத்தின் பின்பு பாத்திரத்தை திறந்து முதலில் குழைத்து வைத்துள்ள மாவை மறுபடியும் குழைக்கவும்.

பின்பு குழைத்து வைத்துள்ள எல்லா மாவையும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்தபின்பு அதில் உருட்டி வைத்திருக்கும் சிறிய சிறிய உருண்டைகள் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

உருண்டைகள் யாவும் பொரித்த பின்பு தாட்சியை (வாணலியை) அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் சீனி(சர்க்கரை)யை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும்.

பாகு பதத்தில் காய்ச்சிய பின்பு அப்பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.

பிறகு பாகு உள்ள பாத்திரத்தில் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பாத்திரத்தை (1 - 2) மணித்தியாலம் நன்றாக மூடிவைக்கவும்.

(1 - 2) மணித்தியாலத்தின் பின்பு சுவையான சத்தான குலாப் ஜாமுன் தயாராகிவிடும்.

குறிப்புகள்: