குங்குமப்பூ பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 3/4 கப்

குங்குமப்பூ - 10

முந்திரி - 10 (நெய்யில் வறுத்து கொரகொரவென அரைத்தது)

உலர்ந்த திராட்சை - 10

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சவும்.

அதனுடன் சேமியாவை சேர்த்து நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் போதே முந்திரி,குங்குமப்பூவை சேர்த்து கொதிக்கவிடவும்.

நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்து கடாயை நிறுத்து சர்க்கரையை சேர்க்கவும்.

பின் மீண்டும் அடுப்பை சிம்மில் வைத்து பால்கலவையை கொதிக்கவிடவும்.

இறக்கும் சமயம் திராட்சையை நெய்யில் வறுத்து கொட்டவும்.

குறிப்புகள்: