கிறிஸ்மஸ் அச்சு முறுக்கு
தேவையான பொருட்கள்:
மைதாமாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 3/4 கோப்பை
முட்டை - 1
கெட்டியான தேங்காய்ப்பால் - 1/2 கோப்பை
எள்ளு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 கோப்பை
தண்ணீர் - தேவையான அளவு
உப்புத்தூள் - 1 சிட்டிக்கை
செய்முறை:
முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். அதில் முறுக்கு அச்சியை வைத்து சூடாக்க வேண்டும்.
சற்று குழிவான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் சர்க்கரையைப் போட்டு அது கரையும் வரை நன்கு கலக்கவும்.
பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி மைதாவையும் எள்ளையும் சேர்த்துக் கொட்டவும்.
கைகளால் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விட்டு தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
கலவை தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
பிறகு எண்ணெயில் உள்ள முறுக்கு அச்சியை வெளியில் எடுத்து மாவில் மெதுவாக அச்சை முக்கால் பாகம் முழுகும் அளவிற்கு முக்கி எடுக்கவும்.
அதை உடனே காய்ந்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் வைத்தால் அச்சியில் ஒட்டியிருக்கும் மாவு பிரிந்து எண்ணெயில் விழுந்து விடும்.
இதேப் போல் எல்லா மாவையும் முறுக்குகளாக சுட்டு எடுக்கவும்.