கிட்ஸ் க்ரீன் பர்பி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரெடிமேட் பிஸ்தா பவுடர் -1 பாக்கெட் (150கிராம்)

கடலை மாவு - 50 கிராம்

மில்க் பவுடர் - 50 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1 கப் நீரை கொதிக்கவிட்டு அதில் சர்க்கரை கலக்கவும்

ஒரு கம்பி பதம் வரும்வரை பாகு வைக்கவும்.

மற்றொரு வாணலியில் 1டேபிள்ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் முதலில் கடலை மாவை பச்சை வாசம் போக வறுக்கவும்.

பின் அதனுடன் பிஸ்தாபவுரை கொட்டி கிளறவும்.

பிறகு மில்க்பவுடரை கொட்டி கிளறவும்.

மூன்றையும் கட்டியில்லாமல் கிளறி சிம்மில் வைக்கவும்.

பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அதை வறுத்த பிஸ்தாகலவையில் கொட்டி மிதமான தீயில் விடாமல் கிளறவும்.

வாணலியில் ஒட்டும்போது மீதி நெய்யை விட்டு கிளறை ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில்கொட்டி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: