கிட்ஸ் க்ரீன் பர்பி
0
தேவையான பொருட்கள்:
ரெடிமேட் பிஸ்தா பவுடர் - 1 பாக்கெட் (250கிராம்)
சர்க்கரை - 150 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1 கப் நீரை கொதிக்கவிட்டு அதில் சர்க்கரை கலக்கவும்
ஒரு கம்பி பதம் வரும்வரை பாகு வைக்கவும்
ஒரு கம்பி பதம் வந்ததும் அதில் பிஸ்தாபவுடரை கொட்டி மிதமான தீயில் கட்டியில்லாமல் கலக்கி விடாமல் கிளறவும்.
வாணலியில் ஒட்டும்போது நெய்யை சிறிதுசிறிதாக கொட்டி ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில்கொட்டி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.