கிசஸ் ஸ்வீட்
0
தேவையான பொருட்கள்:
முட்டை (வெள்ளை கரு மட்டும்) - 2
சீனி - 100 கிராம்
ஜெலட்டின் பவுடர் - 1/2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு துளி
புட் கலர் - ஒரு துளி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் சீனியை பவுடர் செய்துக்கொள்ளவும்.
முட்டையை நுரை வரும்வரை நன்றாக அடித்து அத்துடன் சீனி,ஜெலட்டின் பவுடர்,எசன்ஸ்,கலர்,எல்லாம் சேர்த்து நன்றாக அடிக்கவும் ஐஸ்கிரீம் போலவரும்.
வெண்ணெய் தடவிய தட்டில் ஒவ்வொரு மேசைக்கரண்டி அளவு ஊற்றி சேர்ந்துவிடாமல் சிறிது இடைவெளிவிட்டு ஊற்றினால் எல்லாம் சேர்ந்துவிடாமல் இருக்கும்.
.ஃப்ரீ ஹீட் செய்த ஓவனில் வைத்து 180c யில் வேகவிடவும்.
10 நிமிடத்தில் கிசஸ் ஸ்வீட் தயார்.