கார்த்திகை அப்பம்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - 1/4 கிலோ

கோதுமை மாவு - 1/4 கிலோ

உளுந்து - 150 கிராம்

பூவன் வாழைப்பழம் - 2

வெல்லம் - 1/4 கிலோ

ஏலக்காய் - 8

எண்ணை - 1/2 லிட்டர்

உப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

ஏலக்காயை தோல் நீக்கி பொடிக்கவும்.

அரிசியையும், உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.

குருணை பதத்திற்கு மாவு அரைபட்டவுடன் வாழைப்பழங்களைப் போட்டு ஐந்து நிமிடம் அரைக்கவும்.

பிறகு வெல்லத்தை பொடித்து போட்டு இரண்டு நிமிடம் அரைக்கவும்.

ஏலக்காய் சேர்க்கவும்.

வெல்லம் போட்டவுடன் மாவு நன்றாக நீர்த்து விடும்.

இப்போது கோதுமை மாவை சலித்து போட்டு அரைக்கவும்.

தேவைபட்டால் நீர் ஊற்றவும். எல்லாம் சேர்ந்து மாவு இட்லி பததிற்கு அரை பட்டவுடன் வழித்து எடுக்கவும்.

அடுப்பில் எண்ணையை சூடாக்கி ஒரு சிறிய குழிக் கரண்டி மாவை எண்ணையில் ஊற்றவும்.

உப்பிக் கொண்டு மேலே வரும். ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போடவும்.

மீண்டும் ஒரு நிமிடம் கழித்து ஒரு கம்பியால் நடுவில் இரண்டு குத்து குத்தி விடவும்.

பொன்னிறமாக வெந்ததும் எடுத்து எண்ணை உறிஞ்சும் தாளில் சுற்றி, பிறகு தட்டில் எடுத்து அடுக்கவும்.

குறிப்புகள்:

ஒரே நேரத்தில் முன்று அப்பங்கள் வரை ஊற்றலாம்.