காரட் அல்வா (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

காரட் - 225 கிராம்

சீனி - 115 கிராம்

பால் - 500 கிராம்

நெய் - 55 கிராம்

முந்திரிப் பருப்பு - 15 கிராம்

ஏலக்காய் - 2 கிராம்

செய்முறை:

காரட்டை கழுவிக் கொண்டு அதன் தோலை நீக்கி துருவிக் கொள்ளவும்.

பாலை ஒரு கடாயில் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் துருவிய காரட்டை போட்டு கிளறவும்.

சீனியை கொட்டி சிறிது நேரம் நன்கு கிளறவும். எல்லாம் சேர்ந்து, அல்வா பதத்திற்கு திரண்டு வரும் போது ஏலக்காயை நசுக்கி போடவும்.

நெய்யை ஊற்றி கிளறி இறக்கவும். இறக்கிய பிறகு முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, சிறு சிறு துண்டாக நறுக்கித் தூவவும்.

குறிப்புகள்: