காரட் அல்வா(2)
0
தேவையான பொருட்கள்:
துருவிய காரட் - 2 கப்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
பால் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
உலர் பழங்கள் - 1 கப் (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை:
நாண்ஸ்டிக் பாத்திரத்தில் நெய்விட்டு காரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
பின் சர்க்கரை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி, பாலை சேர்க்கவும்.
பின் ஏலக்காய் தூள் சேர்த்து திரண்டு வரும் வரை கிளறவும்.
பரிமாறும் முன் பிஸ்தா, முந்திரி, வெள்ளரி விதை, நறுக்கிய பாதாம் தூவி கொடுக்கவும்.