காக்கரட்டை பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கிலோ
கரூர் நெய் - 150 கிராம் அல்லது டால்டா
சீனி - 100 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
சீனியை மிக்ஸியில் பொடி செய்து மாவில் போட்டு உப்பு சேர்த்து நெய்யை உருக்கி அதில் ஊற்றி தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி போல் போட்டுக் கொள்ளவும். கத்தியால் ஓரங்களை வெட்டி விட்டு.சின்ன, சின்ன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பீஸை எடுத்து குறுக்காக(Cross) கீழிருந்து மேல் நோக்கி மடக்கவும்.
பிறகு நடுவில் ஒரு விரல் வைத்து கீழ் நோக்கி மடக்கவும்.
நன்கு இரு பக்கமும் சுருட்டி அழுத்திவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.