காஃபி புட்டிங்





தேவையான பொருட்கள்:
இன்ஸ்டன்ட் காஃபித்தூள் - 1 தேக்கரண்டி
முட்டை - 4
பால் பவுடர் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
உப்பு - ஒரு பின்ச அல்லது 1 தேக்கரண்டி இன்ஸ்டண்ட் காஃபித்தூள்
முட்டை - 4
கன்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக ப்லென்டர் அல்லது மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
அடித்தக் கலவையை ஒரு மூடி வைத்த ஸ்டீல் பாக்ஸில் ஊற்றவும்.
பாக்ஸை குக்கரினுள் வைத்து 4 அல்லது 5 விசில் வைத்து இறக்கவும்.
விசில் அடங்கியதும் கலவை வைத்தப் பாத்திரத்தை எடுக்கவும். கத்தி அல்லது ஃபோர்க் கொண்டு குத்திப் பார்த்துக் கலவை வெந்து விட்டதை உறுதி செய்யவும்.
ஒரு தட்டில் ஸ்டீல் பாக்ஸை மெதுவாக கவிழ்க்கவும். தேவையான அளவுகளில் துண்டுகள் போடவும்.
குறிப்புகள்:
கன்டென்ஸ்ட் மில்கிற்கு சேர்க்கும் போது இனிப்புப் பார்த்து சேர்க்கவும் இல்லையென்றால் கூடிவிடும்.
இனிப்பு குறைவாக விரும்புவோர் சர்க்கரை அரை கப் சேர்க்கலாம் நான் ஆரோமா இன்ஸ்டண்ட் காஃபிதூள் பயன்படுத்தியதால் சர்க்கரை கூடுதலாக சேர்த்துள்ளேன்.