கல்கண்டுப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
பால் - 1 கப்கல்கண்டு - 2 கப்
நெய் - 1/2 கப்
கேசரிப் பவுடர்
முந்திரி
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்
குங்குமப் பூ
செய்முறை:
அரிசி, பருப்பைக் கழுவி, பாலும் தண்ணீரும் சேர்த்து 3 பங்கு இருப்பது போல் வைத்து, குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
2 டேபிள்ஸ்பூன் நெய்யில் கிஸ்மிஸ், முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீரோடு கல்கண்டையும் போட்டு, பாகு காய்ச்சவும். (முடிந்தவரை பெரிய சைஸ் கல்கண்டாக இருந்தால் உடைத்துக் கொள்ளவும். .)
ஏலப்பொடி கேசரிப் பவுடர் சேர்க்கவும்.
பாகு லேசாக வந்தவுடன், பொங்கலை அழுத்தமாகக் கரண்டியால் ஓரளவு மசித்து, பாகில் சேர்க்கவும்.
மீதி நெய்யையும் சேர்த்து, இறுகிச் சுருண்டு கெட்டியாக வரும்போது இறக்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்க்கவும். சூடாகச் சாப்பிட, சுவையாக இருக்கும்