கண்டென்ஸ்ட் மில்க் மாம்பழ பர்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்

தேங்காய் துறுவல் - 1/2 கப்

மாம்பழ் கூழ் - 1 கப்

சர்க்கரை - 1/4 கப்

ஏல தூள் - 1/2 தேக்கரண்டி

நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு அடிபிடிக்காத பாத்திரத்தில் (நான்ஸ்டிக்) மாம்பழ கூழ்,நெய்

சேர்த்து நன்றாக அடிபிடிக்காமல் கிளறவும்.

மாம்பழகூழ் நல்ல கெட்டியாகி மேலே நெய் பிரிந்து வரும் போது

அதில் துறுவிய தேங்காய்,சர்க்கரை,கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து

நன்றாக கிளறவும். நல்ல உருண்டு வரும் போது ஏலதூள்

மேலும்1 தே.க நெய் சேர்த்து கிளறவும்.

நெய் தடவிய ட்ரே அல்லது தட்டில் இந்த கலவயை கொட்டி சமமாக பரத்தவும்.

விரும்பிய அளவில் வில்லைகள் போடவும்.

குறிப்புகள்:

ப்ரிட்ஜில் வைத்தால் நிறய்ய நாட்கள் வைத்து சாப்பிடலாம்..