கடலை உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1/2 கிலோ

பனங்கருப்பட்டி அல்லது பாகு வெல்லம் - 400 கிராம்

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கிக்கொள்ளவும்.

கருப்பட்டி அல்லது வெல்லத்தை கத்தியால் பொடியாக சீவிக் கொள்ளவும்.

வேர்க்கடலையை மிக்ஸியில் தூள் செய்யவும்.

சீவிய கருப்பட்டி, வேர்க்கடலைப்பொடி இரண்டையும் அகலமான பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு பிசையவும்.

1/4 டம்ளர் அளவு கொதி நீரை ஸ்பூனால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு, அடித்து பிசைந்தால், எண்ணெய் விடும். நன்கு எண்ணெய் விடும் அளவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம்

குறிப்புகள்: