கடலைமா லட்டு
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கடலைமா - 1 கிலோ
நெய் - 750 கிராம்
தூளாக்கிய சீனி - 750 கிராம்
உலர்ந்த திராட்சை - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
கடலைமாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
அடிப்பாகம் கனமாகவும், அகலமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
அதில் ஒரு மேசைக்கரண்டி நெய்யை ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
பின்பு மிகுதி நெய்யை ஊற்றி உருக விடவும்.
நெய் உருகியதும் கடலைமாவை சிறிது சிறிதாக தூவி விடாமல் கிளற வேண்டும்.
கடலைமா வெந்து நல்ல வாசனை வரும். அப்பொழுது இறக்க வேண்டும்.
அரைத்த சீனி, வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும்.
கலவை ஓரளவு சூடாக இருக்கும் பொழுது விரும்பிய அளவு லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து பரிமாறவும்.