கடலைப் பருப்பு பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 200 கிராம்

வெல்லம் - 300 கிராம்

ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 10 கிராம்

தேங்காய் - 1

தண்ணீர் - 3 கப்

செய்முறை:

தேங்காயைத் துருவி அதில் தண்ணீர் ஊற்றி நன்கு பிழிந்து திக்கான பால் எடுக்கவும்.

பால் எடுத்த பிறகு இருக்கும் தேங்காய் சக்கையில் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுத்து தனியாக வைக்கவும்.

மறுமுறையும் தண்ணீர் ஊற்றி அரைத்து பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பை நறுக்கி நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்து அதில் கடலைப்பருப்பைப் கழுவிப் போட்டு வேக வைக்கவும்.

பருப்பு வெந்தவுடன் மசித்து விட்டு அதனுடன் கடைசியாக எடுத்த பாலை விட்டு கொதிக்க வைக்கவும்.

பருப்புடன் பொடித்த வெல்லம் சேர்த்து இரண்டாவதாக எடுத்த பாலையும் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

பாயசம் கெட்டியானவுடன் இறக்கி, ஏலக்காய்ப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, முதலில் எடுத்த தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறவும்.

ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் முழு முந்திரி பருப்பை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: