கசகசா பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய தேங்காய் - 1

கசகசா - 100 கிராம்

பொடித்த வெல்லம் - 2 கப்

பொடித்த முந்திரி - 3 மேசைக்கரண்டி

பால் - 3 கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கசகசா, முந்திரி இரண்டையும் போட்டு ஊற வைக்கவும்.

தேங்காயை துருவி வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், ஊற வைத்த கசகசா, முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக மைப் போல் அரைக்கவும்.

வெல்லத்தை சுட வைத்த தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதனை அரைத்த விழுதுடன் நன்றாக கலந்து மிதமான தீயில்வைத்து கொதிக்க வைக்கவும்.

சிறிது கெட்டியானதும் பாலை காய்ச்சி அதில் ஊற்றி அதனுடன் ஏலக்காய் பொடி, தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: