ஓட்ஸ் கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்

சீனி - 3/4 கப்

நெய் - 1/2 கப்

ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

காய்ச்சிய பால் - 1 கப்

கேசரி கலர் - தேவைக்கேற்ப

விரும்பிய நட்ஸ் - சிறிது

செய்முறை:

கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.

பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.

கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.

ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.