எள்ளு பர்பி
0
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள்ளு - 3 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
வேர்கடலை - 1 கப்
டிரை தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை:
வெறும் கடாயில் எள்ளு போட்டு வாசம் வர வறுத்து, ஒன்னு இரண்டாக பொடித்து வைக்கவும்.
வேர்கடலையும் வறுத்து, தோல் நீக்கி நன்றாக பொடியாக்கவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
இதில் பொடித்த எள்ளு வேர்கடலை கலவை சேர்த்து கிளரவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது எடுத்து நெய் தடவிய தட்டில் மெல்லிதாக பரப்பி மேலே தேங்காய் துருவல் தூவி அழுத்தி விடவும்.
சிறிது ஆரியதுமே துண்டுகளாக வெட்டவும்.