உளுந்து லட்டு

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலக்காய் தூள் - சிறிது

நெய் - 4 மேசைக்கரண்டி

உலர் திராட்சை - சிறிது

முந்திரி - சிறிது

செய்முறை:

உளுந்தை வெறும் கடாயில் சிறு தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடி செய்யவும்.

பொடி செய்த சர்க்கரை, ஏலக்காயை ஒரு பெளலில் எடுத்துக் கொள்ளவும்.

வறுத்து வைத்த உளுந்தை மிக்சியில் நைசாக அரைக்கவும்

அரைத்த உளுந்தை சர்க்கரை, ஏலக்காய் பெளலில் சேர்க்கவும்.

ஒரு கடாயில் நெய் விட்டு திராட்சை, முந்திரியை வறுத்து எடுக்கவும்.

வறுத்தவற்றை பெளலில் சேர்க்கவும்.

நெய்யை சூடு செய்து சிறிது சிறிதாக பெளலில் சேர்த்து நெய் சூட்டுடன் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இது ரவா லட்டு போன்று இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இதை செய்வதும் மிக எளிது.